Advertisement

IND vs WI: ஒருநாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை!

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது.

Advertisement
IND vs WI: ODI series in Ahmedabad to be played behind closed doors
IND vs WI: ODI series in Ahmedabad to be played behind closed doors (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 01, 2022 • 02:56 PM

இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 01, 2022 • 02:56 PM

வரும் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளது. 

Trending

மேலும் இத்தொடரில் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், டி20 போட்டிகள் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்நிலையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அகமதாபாத்தில் நடைபெறும் ஒருநாள் தொடர் ரசிகர்களின்றி நடைபெறுமென குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 75 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதியளித்துள்ளதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement