Advertisement
Advertisement
Advertisement

IND vs WI: அகமதாபாத்தில் ஒருநாள்; ஈடன் கார்டனில் டி20 - பிசிசிஐ

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது அதை 2 ஆக பிசிசிஐ குறைத்துள்ளது.

Advertisement
Ind vs WI: ODIs to be played in Ahmedabad, T20Is to go ahead in Kolkata
Ind vs WI: ODIs to be played in Ahmedabad, T20Is to go ahead in Kolkata (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 22, 2022 • 10:13 PM

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 22, 2022 • 10:13 PM

முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி அகமதாபாத்திலும், 2ஆவது போட்டி 9 ஆம் தேதி ஜெய்ப்பூரிலும், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 12ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டது.

Trending

அதேபோல் டி 20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி கட்டாக்கிலும், 2ஆவது போட்டி 18 ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 20ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் 6 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கொரோனா உச்சத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகின. 

அதன்படி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அகமதாபாத்திலும், டி20 தொடர் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனிலும் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இதன் மூலம் அணிகளின் பயண நேரத்தை குறைக்க முடியும் மற்றும் பாதுகாப்பான சூழலில் வீரர்கள் விளையாட முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement