Advertisement

IND vs WI: முதல் போட்டியிலிருந்து ராகுலின் விலகலுக்கான காரணம் இதுதான்!

கேஎல் ராகுலின் சகோதரி திருமணம் இருப்பதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.

Advertisement
 IND vs WI: Reason why KL Rahul will miss the first ODI in Ahmedabad
IND vs WI: Reason why KL Rahul will miss the first ODI in Ahmedabad (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 03, 2022 • 01:51 PM

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின்னர் தோல்வியுடன் நாடு திரும்பிய இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 03, 2022 • 01:51 PM

இந்த தொடரில் முதலாவதாக நடைபெற இருக்கும் 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனான கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. 

Trending

மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படி ராகுல் முதலாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலக என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கேஎல் ராகுலின் சகோதரி திருமணம் இருப்பதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே பிசிசிஐ அவருக்கு முதல் ஒருநாள் போட்டியின்போது விடுப்பினை வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து 2ஆவது மற்றும் 3-ஆவது ஒருநாள் போட்டிகளில் அவர் அணியில் இணைந்து விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய அணியில் இடம் பெற்றுள்ள துவக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுலும் முதல் போட்டியில் விளையாடும் அணியில் இருந்து வெளியேறியது இந்திய அணிக்கு ஒரு இழப்பு என்றே கூறலாம்.

இதன் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் இணையே தொடக்கம் தருவார்கள் என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement