மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாகவுள்ளது - வாஷிங்டன் சுந்தர்
மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளதென வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றார். கடந்த சில மாதங்களாக காயம் மற்றும் கரோனா காரணமாக அவர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வந்தார்.
அதன்படி இன்றைய போட்டியில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 9 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில் போட்டிக்கு இடையே வாஷிங்டன் சுந்தர் விளையாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியாளித்தார்.
அதில் பேசிய அவர், “நிச்சயமாக, இந்திய அணிக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடங்குவதற்கு சிறிது திருப்பம் மற்றும் சிறிது தாமதம் எனக்கு விருந்தாக இருந்தது. நானும் சாஹலும் இன்று பந்துவீசி சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now