
Ind vs WI: Virat Kohli Set to Join Sachin Tendulkar in Elite Club With Massive ODI Milestone in Indi (Image Source: Google)
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களுடன் 12,285 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களை குவித்து பல சாதனைகளை தகர்த்துவந்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறிவருகிறார். இந்த 2 ஆண்டுகளில் பல முறை 70-80களை கடந்த நிலையில், சதத்தை தவறவிட்டுவிட்டார்.
எனவே விராட் கோலியிடமிருந்து சதத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் விராட் கோலியிடமிருந்து சதத்தை அனைவரும் எதிர்பார்ப்பதுடன், அவரே எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.