
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று கயானா நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப்போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர், இஷான் கிஷன் துவக்க வீரராக இந்த போட்டியில் விளையாடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால்-க்கு துவக்க வீரருக்கான வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய வாசிம் ஜாஃபர் கூறுகையில், “ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் தொடர்ச்சியாக 3 அரைசதம் அடித்து தன்னை நிரூபித்து இருந்தாலும் என்னை பொறுத்தவரை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 துவக்க வீரராக விளையாட வேண்டும்.