Advertisement

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!

இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 06, 2024 • 07:16 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதனால் 13 வருடங்கள் கழித்து சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து இந்தியா அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்த தொடரில் விளையாடிய இந்தியா அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 06, 2024 • 07:16 PM

இந்நிலையில் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரு நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் விளையாடும் சில பயிற்சி போட்டிகள் நடைபெறும் என்று தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட 3 பயிற்சி போட்டியில் இந்தியா ஏ அணி விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Trending

அதில் முதலாவதாக வரும் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் முதல் பயிற்சி போட்டி அகமதாபாத் நகரில் உள்ள குரூப் பி மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஜனவரி 17 முதல் 20 வரை 2ஆவது போட்டியும் ஜனவரி 24 முதல் 27 வரை 3ஆவது போட்டியும் அகமதாபாத் நகரில் உள்ள முதன்மை மைதானத்தில் நடைபெற உள்ளது.

இறுதியாக பிப்ரவரி 1 – 4 தேதி வரை அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் கடைசி பயிற்சி போட்டி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி போட்டிகளில் அபிமன்யு ஈஸ்வரன் இந்தியா ஏ அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்துள்ள பிசிசிஐ நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சமீப காலங்களில் உள்ள தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த பயிற்சி போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார். அதே போல தமிழகத்துக்காக விளையாடும் மற்றொரு வீரர் ரஞ்சன் பிரதோஷ்பால் தேர்வாகியுள்ள இந்த அணியில் கேஎஸ் பரத், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், சர்பராஸ் கான், பிரதோஷ ரஞ்சன் பால், கேஎஸ் பரத், மனவ் சுதர், புல்ஹித் நரங், நவ்தீப் சைனி, துசார் தேஷ்பாண்டே, வித்வாத் கவேரப்பா, துருவ் ஜுரேல், ஆகாஷ் தீப்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement