
India a win away from creating historic ODI first in 39 years in West Indies (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. கடைசி ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட்டில் நடக்கிறது.
அந்த போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்த சாதனையை இந்திய அணி படைக்கும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸை இதுவரை இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்ததில்லை. எனவே கடைசி ஒருநாள் போட்டியில் ஜெயித்தால் இந்திய அணி சாதனை படைக்கும்.