Advertisement

ஆசிய கோப்பை 2023: ஒரே குரூப்பில் இடம்பிடித்த இந்தியா - பாகிஸ்தான்!

வரவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 05, 2023 • 12:12 PM
India and Pakistan will be in the same group in the Asia Cup!
India and Pakistan will be in the same group in the Asia Cup! (Image Source: Google)
Advertisement

கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2022 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்குத்தான் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அப்போது கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணி வழக்கமாக பெரிய தொடரில் அழுத்தங்களுடன் விளையாடுவதைப் போல, இத்தொடரில் அழுத்தங்களுடன் விளையாடி படுமோசமாக சொதப்பியது.

முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அடுத்து ஹாங்ஹாங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீ்ழ்த்தி சூப்பர் 4 வாய்ப்பை உறுதி செய்தது. ஆனால், சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், அடுத்து இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்தியா அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. 

Trending


இந்த இரண்டு போட்டிகளிலும் 19.5ஆவது பந்தில்தான் இந்தியா தோற்றது. இப்படி இறுதிப்போட்டிக்கு கூட போகாமல் படுமோசமாக தோற்ற இந்திய அணி, அடுத்து இந்தாண்டு ஆகஸ்டில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை 2023 தொடரில் கோப்பை வென்றுகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான முதற்கட்ட அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளது. குரூப் ஆட்டங்கள், சூப்பர் 4 சுற்று, இறுதிப்போட்டி என அனைத்தும் இந்த 13 போட்டிகளுக்குள்ளேயே அடங்கிவிடும். 

மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், எந்தெந்த குரூப்பில் எந்தெந்த அணிகள் இருக்கிறது என்பது குறித்த விரிவான தகவல் இன்னமும் வெளியாகவில்லை.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement