Advertisement

WI vs IND: கம்பேக் கொடுக்கும் அஸ்வின், குல்தீப்; டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
India announce squad for West Indies T20Is; Kohli, Bumrah, Chahal miss out (Ld)
India announce squad for West Indies T20Is; Kohli, Bumrah, Chahal miss out (Ld) (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 14, 2022 • 04:00 PM

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட், டி20 தொடர்கள் முடிந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. இன்று 2ஆவது ஒருநாள் போட்டியும், வரும் 17ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டியும் நடக்கின்றன. அத்துடன் இங்கிலாந்து தொடர் முடிகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 14, 2022 • 04:00 PM

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Trending

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்களாக ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஃபிட்டாக இருந்தால் அணியில் இடம்பெறுவர். இல்லையெனில் இடம்பெறமாட்டார்கள்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இத்தொடரில் மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement