டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
அதன்பின் சூப்பர் 8 சுற்று போட்டிகளும் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். அதன்பின் இறுதிப்போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடர், ஜூன் 30ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trending
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஜூன் 5ஆம் தேதி விளையாடவுள்ளது.
அதன்பின் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. பின்னர் ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா அணியையும், ஜூன் 15ஆம் தேதி கனடா அணியையும் எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
India are likely to start their T20 World Cup 2024 campaign against Ireland on June 5! #Cricket #T20WorldCup #India #TeamIndia #RohiSharma #ViratKohli #KLRahul #HardikPandya pic.twitter.com/4jnFC3db6l
— CRICKETNMORE (@cricketnmore) January 4, 2024
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை வரும் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிட ஐசிசி திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now