
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்க காத்திருக்கும் இந்தியா இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே வெற்றியை பதிவு செய்து உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்க தயாராகிவருகிறது.
மறுபுறம் ஏற்கனவே 5 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா நிச்சயமாக இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஜடேஜா, குல்தீப், அஸ்வின் ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் இந்தியா வந்தாலும் புத்துணர்ச்சியுடன் அதை நொறுக்குவதற்கு திட்டங்கள் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறிடதது பேசிய அவர், “வீரர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றனர். எனவே களத்திற்கு வெளியே இருப்பதைப் போலவே அவர்கள் களத்திலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள் என்று பெருமையாக சொல்வேன். மேலும் எவ்வளவு காலங்கள் மாறினாலும் இயற்கையாக எங்களுடைய வீரர்களுக்குள் இருக்கும் பண்புகள் மாறாது. அதனால் இப்போதும் பல்வேறு தருணங்களில் எங்களுடைய வீரர்கள் கோபப்படுவதை நீங்கள் பார்க்க முடியும்.