
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 15ஆவது தொகுப்பு வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது இதற்காக இந்திய அணி தீவிரமாக பல திட்டங்களை வகுத்து வருகிறது குறிப்பாக இந்திய அணியில் பெரிதளவில் மாற்றங்கள் செய்யாமல் குறிப்பிட்ட 20 வீரர்களை தேர்வு செய்து ஒருநாள் உலகக்கோப்பை வரை அவர்களை முழுக்க முழுக்க பயன்படுத்தி வீரர்கள் மத்தியில் கூடுதல் நம்பிக்கையை வளர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறது.
சில சீனியர் வீரர்களுக்கு டி20 தொடர்களில் இருந்து ஓய்வும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களது பணிச்சுமை இதன் மூலம் குறையலாம். ஒருநாள் போட்டியில் கூடுதல் கவனத்துடனும் இருக்கலாம் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சீனியர் வீரர்கள் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பை பற்றிய அறிவுரைகளை ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவினருக்கு கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா போன்ற அணி எப்போதும் பலவீனமான அணியாக இருக்க முடியாது. ஏனெனில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். திறமையான வீரர்கள் பாதி பேருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பதே கடினமாக இருக்கிறது. இப்படிப்பட்ட இந்திய அணி எந்த வகையில் பலவீனமாக இருக்க முடியும்.