மகளிர் பிக் பேஷ்: தொடரிலிருந்து வெளியேறினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியிருந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக நடப்பாண்டு மகளிர் பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான மகளிர் பிக் பேஷ் டி20 தொடரின் எட்டாவது சீசன் அக்டோபர் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இத்தொடரில் இதுவரை 10 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியிருந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக நடப்பாண்டு மகளிர் பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Trending
சமீபத்தில் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியை ஹர்மன்ப்ரீத் கவுர் வழிநடத்திய நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டு தற்போது பிக் பேஷ் தொடரிலிருந்து விலகினார்.
இதுகுறித்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில், “ஹர்மன்ப்ரீத் கடந்த சீசனில் எங்களுக்கு அருமையாக இருந்தார், மேலும் இந்த ஆண்டு அவரை மீண்டும் எங்கள் அணியில் சேர்க்க நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் காயத்தால் வெளியேற்றப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு மகளிர் பிக் பேஷ் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக 12 இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்கள் உள்பட 406 ரன்களையும், 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தொடரின் சிறந்த வீராங்கனை என்ற விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் சக இந்திய அணி வீராங்கனைகளான ஜேமிமா ரோட்ரிக்ஸ் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியிலும், பூஜா வஸ்த்ரேகர் பிரிஸ்பேன் ஹீட் அணியுடனும் இணைந்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now