Advertisement

ஒன்றிரண்டு வீரர்களை சார்ந்து அணி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை - ரோஹித் சர்மா!

நானும் ராகுல் டிராவிட்டும் பென்ச் வலிமையை அதிகரிப்பது என்று முடிவெடுத்தோம். ஏனெனில் இன்றைக்கு அதிகமான போட்டிகள் ஆடப்படுகின்றன. அதனால் வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதும் போதுமான ஓய்வளிப்பதும் அவசியமாகிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement
India captain Rohit Sharma and head coach Rahul Dravid prepare backups for big stars
India captain Rohit Sharma and head coach Rahul Dravid prepare backups for big stars (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 18, 2022 • 07:32 PM

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பான திட்டங்களை இயற்றி செயல்படுத்திவருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 18, 2022 • 07:32 PM

இப்போதைக்கு, இந்திய கிரிக்கெட் அணி எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்து இல்லை. அது ரோஹித், கோலி, பும்ரா என எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி. அவர்களில் ஒருவர் அல்லது அவர்கள் யாருமே இல்லாமலேயே கூட வெற்றி பெறுமளவிற்கு திறமையான இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஆட வாய்ப்பளித்து வலுவான பென்ச் பலத்துடன் இந்திய அணி உள்ளது.

Trending

இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, “பும்ரா, ஷமி உட்பட எந்த வீரருமே எப்போதுமே ஆடிக்கொண்டே இருக்கப்போவதில்லை. எனவே மற்ற வீரர்களையும் முயற்சி செய்து பார்க்கவேண்டும். அந்தவகையில், நானும் ராகுல் டிராவிட்டும் பென்ச் வலிமையை அதிகரிப்பது என்று முடிவெடுத்தோம். ஏனெனில் இன்றைக்கு அதிகமான போட்டிகள் ஆடப்படுகின்றன. அதனால் வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதும் போதுமான ஓய்வளிப்பதும் அவசியமாகிறது.

ஒன்றிரண்டு வீரர்களை சார்ந்து அணி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு வீரரும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்யவேண்டும். அந்தமாதிரியான ஒரு அணியை கட்டமைக்க விரும்பினோம். அதனால் தான் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்பளிக்கப்படுகிறது. இது அவர்களுக்கு பெரியளவில் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement