உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியானது தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியானது அபாரமான வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
அதன்படி இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 74.24 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
Trending
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றது. மேற்கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை அணியானது 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், இங்கிலாந்து அணி 42.19 புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்திலும் நீடிக்கிறது. அதேசமயம் தொடர் தோல்விகளைச் சந்திதுள்ள வங்கதேச அணியானது பின்னடைவை சந்தித்துள்ளது.
முன்னதாக 39.29 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் இருந்த வங்கதே அணியானது தற்போது, 34.38 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தென் ஆப்பிரிக்க அணி 38.89 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும், இலங்கை அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்த நியூசிலாந்து அணியானது தற்போது 37.50 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
India Strengthens Their Position In WTC!#INDvBAN #WTC25 pic.twitter.com/XGIH7mqpU2
— CRICKETNMORE (@cricketnmore) October 1, 2024Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து பாகிஸ்தான் அணி 19.05 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியானது தொடர்ந்த ஆதிக்கம் செலுத்தி வருவதன் காரணமாக, ஹாட்ரிக் முறையாக இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now