
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமான நிலையில், 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையனது ஹாசினி பெரேராவும் 30 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 14 ரன்களுக்கும், ஹன்சிமா கருணரத்னே 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் கவிஷா தில்ஹாரி 25 ரன்களுக்கும், நிலாக்ஷி டி சில்வா 10 ரன்களுக்கும், அனுஷ்கா சஞ்சீவனி 22 ரன்களுக்கும், அச்சினி குலசூர்யா 17 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இலங்கை மகளிர் அணி 38.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய மகளிர் அணி தரப்பில் ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, சரணி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.