
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியானது நேற்று வங்கதேசத்தில் உள்ள தாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பேட்டிங் செய்தது. எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 31 பந்துகளில் 27 ரன்கள் அடித்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஷாகிப் அல் ஹசன் வீசிய 11ஆவது ஓவரில் க்ளீன் போல்டானார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் 9 ரன்களில் அவுட்டானார்.
இதனால் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய கிரிக்கெட் அணி 186 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்களும் எடுத்தனர். தவன், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.