
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த திலக் வர்மாவும் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 61 ரன்களில் அபிஷேக் சர்மாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த திலக் வர்மா - சஞ்சு சாம்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 39 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.