ஸ்விங் பந்துகளுக்கு எதிராக இந்திய அணி திணறும் - அலெஸ்டர் குக்!
இந்திய அணிக்கு எதிராக ஸ்விங் பந்து வீசும் பொழுது அவர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் அடைந்த தோல்விக்குப் பிறகு, அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் நிச்சயம் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Trending
இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறுகையில், இந்திய அணிக்கு எதிராக ஸ்விங் பந்து வீசும் பொழுது அவர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“இந்திய அணி சிறப்பான வீரர்களை கொண்டு உள்ளது. ஆனால் பந்துவீச்சில் சற்று தொய்வாக காணப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன். மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சற்று நகரும் படி பந்து வீசினாலும் அதனை இங்கிலாந்து வீரர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். ஆகஸ்ட் மாதத்தில் மைதானங்கள் ஈரப்பதத்துடன் இருந்தால் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவார்கள்.
இந்திய அணிக்கு எதிராக ஸ்விங் பந்து வீசும் பொழுது அவர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாக அமையும். எனவே இந்த தொடரிலும் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி திணறுவது உறுதி என்றும் இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து அணியிடம் கஷ்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now