
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 27ஆம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரு அணிகளும் 28ஆம் தேதி நடைபெறும் தங்களது முதல் போட்டியிலேயே ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை வெளிப்படுத்துவதோடு, இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் நியூசிலாந்து வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உள்பட அனைத்து எதிரணிகளையும் இந்திய அணியே வீழ்த்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.