இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பென் டக்கெட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், பில் சால்ட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து டி20 தொட்ருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் துணைக்கேப்டாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேஉம் இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி இடம்பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த அவர், அதன்பின் தற்போது தான் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.