
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று சென்சூரியனில் தொடங்கியது. இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறிய நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 70* ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்.
இந்நிலையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். குறிப்பாக வித்தியாசமான பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி துல்லியமான யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திண்டாட வைக்கும் பும்ரா இந்திய அணியின் முக்கிய விரராக இருப்பதாக நிடினி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பும்ரா பந்தை எங்கே ரிலீஸ் செய்கிறார் என்பதை பாருங்கள். அவர் பந்தை தம்முடைய தலையின் டாப் பகுதியில் இருந்து ரிலீஸ் செய்கிறார். எனவே பந்தை பின்னோக்கி இழுப்பதற்கான கோணத்தை அவர் எளிதாக பெறுகிறார். அதே சமயம் பிட்ச் செய்த பின் அவரால் பந்தை நேராகவும் வீச முடியும்.