
டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா, காயத்திலிருந்து மீண்ட நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா ஆடினார். அந்த தொடரிலும் முதல் போட்டியில் பும்ரா ஆடவில்லை. கடைசி 2 போட்டிகளில் விளையாடினார்.
2ஆவது டி20 போட்டியில் நன்றாக பந்துவீசிய பும்ரா, 3ஆவது போட்டியில் 50 ரன்களை வழங்கியதுடன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் தொடங்கிய நிலையில், முதல் டி20 போட்டியில் விளையாடத பும்ரா, காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து மட்டுமல்லாது டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகினார்.