
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்தும் படியும் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் மட்டுமே நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியாக உள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி இப்போது இந்த தொடரை ஹைபிரிட் மாடலில் விளையாட பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாவிட்டால், தொடரை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை அவர்களிடமிருந்து பறிக்க ஐசிசி முடிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணிக்கான போட்டிகளை நடத்த ஹைப்ரிட் மாடலை பின்பற்றுமாறு பாகிஸ்தானுக்கு ஐசிசி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
India Could Host Champions Trophy 2025!#CricketTwitter #India #TeamIndia #Cricket #ChampionsTrophy2025 pic.twitter.com/6HRAYDAFDL
— CRICKETNMORE (@cricketnmore) November 14, 2024