
இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய இத்தொடரானது வரும் நவம்பர் 05ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும், அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நவம்பர் 08ஆம் தேதி முதல் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணியானது நவம்பர் 15ஆம் தேதி தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
India's Squad For South Africa T20Is!#INDvSA #INDvNZ #India #TeamIndia #Cricket pic.twitter.com/298OAtt2E0
— CRICKETNMORE (@cricketnmore) October 25, 2024