
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து . இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் இப்போட்டியில் விளையாடுகிறார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலிசா ஹீலி 25 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். பின் 54 ரன்கள் எடுத்த நிலையில் பெத் மூனியும் ஆட்டமிழந்தார்.