இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நவம்பர் 8ஆஅம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேசமயம் இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 சர்வதேச போட்டியில் மீண்டும் ஒருமுறை தொடாக்க வீரராக களமிறங்குவார்கள். இதில் சஞ்சு சாம்சன் கடைசி டி20 சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரர் களமிறங்கியதுடன் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.