Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த இந்தியா; ஆஸி முதலிடம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த இந்தியா; ஆஸி முதலிடம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த இந்தியா; ஆஸி முதலிடம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 29, 2024 • 12:03 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில்  இந்திய அணி கடைசி வரை போராடி 28 ரன்களில் தோல்வியை தழுவியது. அதேபோல், ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 29, 2024 • 12:03 PM

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி புள்ளிப்பட்டியளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த நிலையிலும் ஆஸ்திரேலிய அணி 55 சதவீதத்துடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. அதேசயம் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 33.33 சதவீத புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 7ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

Trending

மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்ததை தொடர்ந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் அணியின் வெற்றி சதவீதம் 43.33ஆக குறைந்ததுடன், பட்டியலின் 5ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அணி இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது 3 இடங்கள் சரிந்து 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 3 அணிகளும் தலா 50 சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் 2, 3 மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளன. மேலும் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement