
இந்திய மகளிர் அணி சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது.
இந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முத்தரப்பு தொடர் மற்றும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையியில் இந்திய அணி இத்தொடர்களை எதிர்கொள்கிறது. மேலும் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படுகிறார்.