Advertisement

இந்திய அணியின் மிகப்பெரும் பலமே அவர் தான் - ரோஹித் சர்மா!

கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் இந்திய அணியின் மிகப்பெரும் பலமே விராட் கோலி தான் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 16, 2021 • 22:00 PM
India T20I captain Rohit Sharma explains Virat Kohli's role in Rahul Dravid era
India T20I captain Rohit Sharma explains Virat Kohli's role in Rahul Dravid era (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரை சென்ற நியூசிலாந்து அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தையும் தவறவிட்டது. டி.20 உலகக்கோப்பை தொடரை முடித்த அடுத்த தினமே இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியிலும், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு வில்லனாக இருந்த நியூசிலாந்து அணியை, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

Trending


இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விசயங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய ரோஹித் சர்மா, கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் விராட் கோலி தான் இந்திய அணியின் மிகப்பெரும் பலம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ரோஹித் சர்மா “விராட் கோலியின் ரோலில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்திய அணிக்காக இத்தனை ஆண்டுகள் செய்து வந்ததையே விராட் கோலியும் இனியும் செய்வார். விராட் கோலி இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். எப்போது விளையாடினாலும் விராட் கோலி பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். 

Also Read: T20 World Cup 2021

அணியில் உள்ள ஒவ்வொருக்கும் ஒரு ரோல் உண்டு. முதலில் பேட்டிங் செய்கிறோமா.? இல்லை இரண்டாவதாக பேட்டிங் செய்கிறோமா என்பதை அடிப்படையாக வைத்து தான் ஆடும் லெவன் தேர்வு செய்யப்படும். ஓய்வில் இருக்கும் விராட் கோலி, இந்திய அணியில் மீண்டும் இணையும் போது இந்திய அணிக்கு நிச்சயம் கூடுதல் பலம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement