
India To Play 3 T20Is & 3 ODIs In The Limited Overs Series Against Sri Lanka (Image Source: Google)
இந்திய அணி அடுத்த மாதம்(ஜூலை) இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, ரஹானே, ரிஷப் பண்ட், அஷ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகிய முக்கிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது.
இதன் காரணமாக ஷிகர் தவான், ஹர்திக் பாண்டிய, பிரித்வி ஷா உள்ளிட்ட இந்திய ஏ அணி வீரர்கள் இலங்கை செல்லவுள்ளனர். இந்த அணிக்கு ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.