Advertisement
Advertisement
Advertisement

இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

Advertisement
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 26, 2024 • 05:03 PM

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 26, 2024 • 05:03 PM

இந்நிலையில் இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது அதன்படி ஜூலை 27ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

Trending

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூலை 27 முதல், ஜூலை 30ஆம் தேதி வரையும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 2 முதல் 7ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடிப்பார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்திய அணியின் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்தியா - இலங்கை போட்டி அட்டவணை

  • முதல் டி20 - ஜூலை 27
  • இரண்டாவது டி20 - ஜூலை 28
  • மூன்றாவது டி20 - ஜூலை 30
  • முதலாவது ஒருநாள் - ஆகஸ்ட் 02
  • இரண்டாவது ஒருநாள் – ஆகஸ்ட் 4
  • மூன்றாவது ஒருநாள் - ஆகஸ்ட் 7

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement