
இந்தியா - வங்கதேசம், பயிற்சி ஆட்டம் - நேரலை & அணி விவரங்கள்! (Image Source: Google)
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானாது வரும் ஜூன் மாதம் முதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
இந்நிலையில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே விளையாட இருந்த அமெரிக்க அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், தனது இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது. அதேசம நடப்பு சீசனில் இந்திய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சி ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.