ENG vs IND: இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
இந்தியாவின் முன்னணி வீரர்கள் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு, திவீரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் தற்போது பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் கேப்டன் ரோஹித் சர்மா தான். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் எனத்தெரிகிறது.
Trending
கே.எல்.ராகுல் இல்லை, ரோஹித் சர்மா இல்லை என்பதால் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிசிசிஐ-க்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. ரோஹித்திற்கு கரோனா உறுதியானவுடனேயே இந்திய வீரர்களை, பொதுவெளியில் எங்கும் செல்ல வேண்டாம், ரசிகர்களிடம் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுக்க வேண்டாம். அறையிலேயே இருங்கள் என அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் அதனை எதையுமே மதிக்காக விராட் கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள், நேற்றிரவு இங்கிலாந்தில் கடை வீதிகளில் உள்ள ஹோட்டல்களில் உணவு அருந்த சென்றுள்ளனர். மேலும் அங்குள்ள ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தும் இருக்கிறார்கள். இது பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், நேற்று இரவு நடந்த மீட்டிங்கில் பல வீரர்களை பிசிசிஐ தலைமை கடுமையாக திட்டியது. விராட் கோலி, பந்த்- போன்ற வீரர்களுக்கு கடைசி கட்ட எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
Win Big, Make Your Cricket Tales Now