
நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர். தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
தொடரை வெல்லப் போவது யார் என்ற நிலையில் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.