ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது நடைபெறவுள்ளது. அரசியல் காரணங்களினால் இவ்விரு அணிகளும் ஐசிசி தொடர்களை கடந்த மற்ற எந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பதால் ஒவ்வொரு முறையும் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதிலும் உலகக்கோப்பை தொடர் என்றால் அதற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதனால் நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்தும், இப்போட்டியின் ஃபேண்டஸி லெவன் குறித்தும் இப்பதிவில் பார்ப்போம்.
Trending
இந்திய அணி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் சோபிக்க தவறிய நிலையிலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் காயத்திலிருந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்த் ஆகியோரது ஆட்டம் அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. அவர்களுடன் ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே போன்ற வீரர்களும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் ஷிவம் தூபே ஒரு பேட்டராக மட்டுமே விளையாடும் நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது. மறுபக்கம் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முதல் போட்டியில் குல்தீப் விளையாடவில்லை என்றாலும் இன்றைய போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. மேற்கொண்டு ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே/சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்/குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
பாகிஸ்தான் அணி
பாபர் ஆசாம் தலைமையில் நடப்பு உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது தொடரின் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் அமெரிக்காவிடன் சூப்பர் ஓவரில் படுதோல்வியைச் சந்தித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த முறை டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணியானது, இந்தாண்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்விகள் எழுந்து வருவது அணிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திவருகிறது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.
அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரையில் கேப்டன் பாபர் ஆசாம், முகம்து ரிஸ்வான், சைம் அயூப், உஸ்மான் கான், ஃபகர் ஸமான், ஷதாப் கான், இஃப்திகார் அஹ்மத் மற்றும் அசாம் கான் ஆகியோர் இருக்கும் பட்சத்தில் இவர்களில் ஒன்று இரண்டு வீரர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் உலகின் மிகவும் வலிமை வாய்ந்த பந்துவீச்சு கூட்டணியான ஷாஹின் அஃப்ரிடி, முகமது அமீர், ஹாரிஸ் ராவுஃப் மற்றும் நசீம் ஷா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் பட்சத்திலும் அந்த அணியால் வெற்றியைப் பெறமுடியாதது அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் உத்தேச லெவன்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், ஃபகர் ஸமான், ஷதாப் கான், அசம் கான், இப்திகார் அகமது, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா, முகமது அமீர்.
இந்தியா - பாகிஸ்தான் ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், ரிஷப் பந்த்
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, பாபர் அசாம், ரோஹித் சர்மா
- ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷதாப் கான்
- பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஷஹீன் அஃப்ரிடி, முகமது அமீர், அர்ஷ்தீப் சிங்.
Win Big, Make Your Cricket Tales Now