
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இன்று அஹ்மதாபாத் நகரம் மக்களால் நிரம்பி வழிய ஆரம்பித்து இருக்கிறது. வெளியில் இருந்து 40 ஆயிரம் ரசிகர்கள் அகமதாபாத் மைதானத்தை நோக்கி குவிந்திருக்கிறார்கள். அஹ்மதாபாத்தை சுற்றியுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன. இதன் காரணமாக மருத்துவமனைகளில் பரிசோதனை என்கின்ற பெயரில் ரசிகர்கள் தங்கும் வினோதம் அரங்கேறி வருகிறது.
மேலும் சுற்றியுள்ள பொழுதுபோக்கு இடங்களிலும் ரசிகர்கள் தங்குகிறார்கள். இவை எல்லாமே இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் ஒரு போட்டிக்காக நடக்கின்ற விஷயம். இதன் காரணமாகத்தான் எல்லா போட்டிகளுக்குமான முக்கிய முதல் போட்டியாக இந்த போட்டி இருந்து வருகிறது. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் சரியான பேட்டி யூனிட் சரியான பவுலிங் யூனிட் என்று மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் முகமது சமி போன்ற ஒருவர் வெளியில் இருக்கும் அளவுக்கு பென்ஞ் வலிமை மிகச் சிறப்பாக இருக்கிறது.
நாளுக்கு நாள் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு நம்பிக்கையாக மாறி வருகிறது. இது இந்திய தரப்பில் மட்டும் இல்லாது வெளிதரப்பில் இருந்தும் கூறப்பட்டு வருகிறது. இந்தியா முதலில் விளையாடிய இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வித்தியாசமான முறையில் வீழ்த்தியது. இரண்டு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் வெளியே வந்து அணியை முன்னே கொண்டு சென்றார்கள்.