Advertisement

டி20 உலகக்கோப்பை:  வரலாறு திருத்தப்படுமா அல்லது தொடருமா? இந்தியா vs பாகிஸ்தான்! 

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan October 24, 2021 • 08:04 AM
 India vs Pakistan: The mother of all rivalries set for another gripping chapter
India vs Pakistan: The mother of all rivalries set for another gripping chapter (Image Source: Google)
Advertisement

உலகின் பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வந்தாலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிதன் அனைவரது கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக இருக்கும். ஏனெனில் இருநாடுகளுக்குள் இருக்கு அரசில் பிரச்சனைகள் அவ்வபோது கிரிக்கெட் போட்டிகள் மூலமும் எதிரொலிக்கும். 

அதுமட்டுமில்லாமல் இருநாடுகளும் இதுநாள் வரை விளையாடியுள்ள அனைத்து போட்டிகளுமே விறுவிறுப்பு பஞ்சமிருக்கா வகையில் தான் அமைந்திருக்கும். அதிலும் உலகக்கோப்பை போட்டி என்றால் அதன் கதையே வேறு.

Trending


ஏனெனில் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியிடம் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதுவரை 2007ஆம் ஆண்டு முதல் 5 முறை டி20 உலகக்கோப்பைப் போட்டியில் மோதியும் இந்திய அணியை ஒருமுறை பாகிஸ்தான் வென்றதில்லை. 

சரி அதுபோகட்டும், 50 ஓவர்கள் உலகக் கோப்பை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அதிலும் ஒருபோட்டியில் கூட பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல முடியவில்லை. இப்படி வரலாறு அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் நிலையில் இன்று வராலாற்றை திருத்தி எழுதும் முயற்சியில் பாபர் ஆசாம் தலைமையில் பாகிஸ்தான் களம்காண்கிறது.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வென்றது அனைத்தும் எம்எஸ். தோனி தலைமையில்தான் இந்திய அணி வென்றுள்ளது. அதனால்தான் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு தோனி ஆலோசகராக அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், டி20 போட்டியைப் பொறுத்தவரை கடைசிப் பந்து வீசப்படும்வரை எதுவும் நிச்சயம் இல்லை. எந்த ஓவரிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இரு அணிகளும் சமவலிமை வாய்ந்தவை. இதில் பீல்டிங்கில் பாகிஸ்தானைவிட இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று கூறலாம். மற்ற வகையில் பேட்டிங், பந்துவீச்சு இரு அணிகளும் சமவலிமை படைத்தவை.

இரு அணிகளிலும் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஷோயப் மாலிக், முகமது ஹபீஸ் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த காலங்களில் இந்திய அணிக்கு எதிராக அதிகமான போட்டிகளில் ஆடிய அனுபவம் இருப்பதால் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, கேஎல்.ராகுல், அதன்பின் விராட் கோலி உறுதியாகிவிட்டது. பயிற்சி ஆட்டம், ஐபிஎல் தொடர் அனைத்திலும் ராகுல், ரோஹித் சர்மாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது என்பதால், தொடக்கம் பற்றி அச்சமில்லை.

விராட் கோலி ஐபிஎல் தொடரிலிருந்தே ஃபார்மில்லாமல் தவித்து வருவதால் இன்றைய போட்டியில் கோலியின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இதற்குமுன் பாகிஸ்தானுக்கு எதிரான 3 உலகக் கோப்பை மோதல்களிலும் கோலி தனிநபராக இருந்து அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார் ஆதலால், இன்றைய ஆட்டம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் பாகி்ஸ்தான் அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னர் தேவை என்பதால் அஸ்வின் அணியில் நிச்சயம் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்திய அணியைப் பொறுத்தவரை ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து பிளேயிங் லெவன் முடிவாகும்.
பாகிஸ்தான் அணியில் இளம் பந்துவீச்சாளர் அஃப்ரிடி, ஹசன் அலி இருவரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருப்பார்கள். 

இது தவிர ரவுப், ஹசன், இமாத் வாசிம், சதாப் கான் என வரிசையாக பந்துவீச்சில் வீரர்கள் இருப்பதும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும். பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு இந்திய வீரர்கள் விளையாடியதி்ல்லை என்பதால், தொடக்கத்தில் தடுமாற்றும் ஏற்படக்கூடும். இதே நிலைமை பாகிஸ்தான் அணிக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் தூணாக இருப்பவர் கேப்டன் பாபர் ஆசாம். அவர் தவிர ஃபகர் ஜமான், முகமது ஹபீஸ், அனுபவ வீரர் ஷோயிப் மாலிக் இருப்பது மிகப்பெரிய பலம். சமீபத்தில் நடந்த ப யிற்சி ஆட்டத்தில்கூட பாபர் ஆஸம் அரைசதம் விளாசி ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் இமாத் வாசிம் ஐக்கிய அரபுஅமீரகத்தில் பந்துவீசி நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார் என்பதால் நாளை இந்திய அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவார். ஒட்டுமொத்தத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வரலாறு திருத்தப்படுமா அல்லது தொடருமா என்பது இன்றைய போட்டி முடிவில்லேயே தெரியும்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement