
India vs Sri Lanka, 3rd T20I – IND vs SL Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable (Image Source: Google)
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், இறுதியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை கேப்டன் தஷுன் ஷனகா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டலாக செயல்பட்டு அணிக்கு 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- இடம் - சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், ராஜ்கோட்
- நேரம் - இரவு 7 மணி