
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
IND vs WI, 2nd Test, Cricket Tips: இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியை வென்றுள்ளதல், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும். இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.