India vs West Indies, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
- நேரம் - மதியம் 1.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் தொடரிலேயே இந்திய அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்ததுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்கியது, தீபக் ஹூடாவின் பந்துவீச்சி என சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்பரிசோதனைகள் பெரிதளவில் அணிக்கு உதவவில்லை.
அதேபோல் பேட்டிங்கில் முன்னாள் கேப்டன் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றமாக அமைந்து வருகிறது.
மேலும் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் அணிக்கு திரும்புவார் என்பதால் நிச்சயம் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் - தவான் கூட்டணி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
அதேசமயம் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோஅர் அபாரமாக செயல்பட்டுவருவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
அதேசமயம் கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அணியின் நட்சத்திர வீரர்கள் ஷாய் ஹோப், பிராண்டன் கிங், பிராவோ, பொல்லார்ட் ஆகியோர் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக இருந்து வருகிறது.
ஆனால் இருப்பினும் இரண்டாவது போட்டியில் விளையாடிய ஓடியன் ஸ்மித் பேட்டிங், பந்துவீச்சு என கலக்கியது அந்த அணிக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.
ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பொறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 135
- இந்தியா வெற்றி - 66
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 63
- முடிவில்லை - 6
உத்தேச அணி
இந்தியா - ரோஹித் சர்மா (கேட்ச்), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், தீபக் ஹூடா/ வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா
வெஸ்ட் இண்டீஸ் - பிராண்டன் கிங், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கே), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன், கெமர் ரோச், ஓடியன் ஸ்மித்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ஷமர் ப்ரூக்ஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா
- பந்துவீச்சாளர்கள் - பிரசித் கிருஷ்ணா, அல்ஸாரி ஜோசம், யுஸ்வேந்திர சாஹல், ஓடியன் ஸ்மித்
Win Big, Make Your Cricket Tales Now