
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவுக்கும் இடையே நேரம் வித்தியாசம் மிகவும் அதிகம். இதனால், வெஸ்ட் இண்டீஸ் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மறுத்துவிட்டது,
இதனை கருத்தில் கொண்டு இந்திய ரசிகர்களுக்காக டி20 மேற்றும் ஒருநாள் போட்டியை காலை 9 மற்றும் 10 மணிக்கே உள்ளூரில் தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதனால் இந்திய ரசிகர்களால் இரவு 8 மணிக்கு டி20 போட்டியை பார்த்துவிட்டு படுத்து உறங்க முடியும். ஆனால் நேற்று எதிர்பாராத விதமாக போட்டி 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
அதற்கு காரணம் சொல்லப்பட்டது தான் இந்திய ரசிகர்களை வெறுப்படைய செய்தது. இரு அணிகளின் உபகரணங்களும் மைதானத்துக்கு கொண்டு வர தாமதமாகிவிட்டதால் போட்டியின் நேரம் மாற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெறும் 3ஆவது டி20 போட்டியின் நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.