
India vs West Indies, Women's T20 World Cup 9th Match – INDW vs WIW Cricket Match Preview, Predictio (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா தனது 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை இன்று எதிர்கொள்கிறது.
இவ்விரு அணிகளில் இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வர, வெஸ்ட் இண்டீஸ் அணியோ இங்கிலாந்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் இருக்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டிஸ் மகளிர்
- இடம் - நியூலேண்ட்ஸ், கேப்டவுன்
- நேரம் - மாலை 6.30 மணி