Advertisement
Advertisement

IND vs ZIM T20I Series: டி20 தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பது எப்படி? முழு தகவல்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஜூன் 06ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பதற்கான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan July 04, 2024 • 15:15 PM
IND vs ZIM T20I Series: டி20 தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பது எப்படி? முழு தகவல்களையும் இங்க
IND vs ZIM T20I Series: டி20 தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பது எப்படி? முழு தகவல்களையும் இங்க (Image Source: Google)
Advertisement

India vs Zimbabwe Live Streaming Details: ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் ஜிம்பாப்வே சென்றடைந்தது. மேலும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending


தொடருக்கு முன்பே இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ்ந்தன

முன்னதாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜிம்பாபெவே - இந்தியா போட்டி நேரலை விவரம்

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜூலை 06ஆம் தேதி ஹராரேவில் நடைபெறவுள்ளது. இந்திய ரசிகர்கள் இப்போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை ஓடிடி தளத்தில் அனுபவிக்க விரும்பினால், அவர்கள் சோனி லைவ் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி தொடரை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 தொடருக்கான இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணி

முதலிரண்டு டி20 போட்டிக்கான இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, சாய் சுதர்ஷன்*, ரின்கு சிங், துருவ் ஜூரல், ஜித்தேஷ் சர்மா*, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா*.

ஜிம்பாப்வே டி20 அணி: சிக்கந்தர் ரஸா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், டெண்டாய் சதாரா, லூக் கோங்வே, இன்னசென்ட் கையா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெல்லிங்டன் மஸகட்ஸா, பிராண்டன் மவுடா, பிளேஸ்ஸிங் முசரபானி, தியான் மேயர்ஸ், ஆன்டும் நக்வி, ரிச்சர்ட் ந்ங்கராவா, மில்டன் ஷும்பா.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஜிம்பாப்வே - இந்திய போட்டி அட்டவணை

  • ஜூலை 06 - முதல் டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
  • ஜூலை 07 - இரண்டாவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
  • ஜூலை 10 - மூன்றாவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
  • ஜூலை 13 - நான்காவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
  • ஜூலை 14 - ஐந்தாவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement