
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய சிந்தனைக் குழு மூன்று சுழற் பந்துவீச்சாளர்களைக் களம் இறக்கி, ஆஸ்திரேலியா அணியை அதிரடியாக முடக்கி சுருட்டியது. ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் உடன் நட்சத்திர மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் களம் இறக்கப்பட்டார். மேலும் தன்னுடைய சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நின்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட களம் இறங்கினார்.
நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் ஒரு மெய்டன் உடன் 38 ரன்கள் மட்டும் தந்து கேமரூன் கிரீன் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். ஓரளவுக்கு சுழற் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில், உலகத் தரம் வாய்ந்த இந்தியாவின் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் விளையாடினால் என்ன நடக்கும்? என்று காட்டினார்கள்.
தற்போது இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் “அடுத்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று நினைக்கிறேன். முகமது ஷமி அற்புதமான பார்மில் இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்தார். டெல்லி விக்கெட் வித்தியாசமானது. மேலும் மைதானமும் சிறியது. அஸ்வினுக்கு வயது ஒரு காரணியாக இருக்கிறது.