
இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற ஒரே டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், பலம் வாய்ந்த ஒருநாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரெலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தாஹிலா மெக்ராத் 50, பெத் முனி 40 ரன்களை சோ்த்தனா். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரேகா் 4 விக்கெட்டுகளையும், ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 406 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மிருதி மந்தனா 74, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73, தீப்தி சா்மா 78, ரிச்சா கோஷ் 52 ரன்களை விளாசினா். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே காா்ட்னா் 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். இதனால் இந்திய மகளிர் அணி 187 ரன்களுடன் முன்னிலை வகித்தது.