
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
IN-W vs AU-W, 1st ODI, Cricket Tips: எதிர்வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுவதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
IN-W vs AU-W: Match Details
- மோதும் அணிகள்: இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
- இடம்: மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட், சண்டிகர்
- நேரம் - இந்திய நேரப்படி மதியம் 1 மணி