
India Women will play first-ever day-night Test against Australia: Jay Shah (Image Source: Google)
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி, வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், “மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் பிசிசிஐ ஆர்வமுடன் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இறுதியில் இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.