இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஓய்வு அறிவித்ததைத்தொடர்ந்து, புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ், சர்வதேச ஒருநாள் போட்டி, டி-20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, நடைபெறவிருக்கும் இந்தியா-இலங்கை தொடருக்கான வீராங்கனைகளை தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. வரும் 23ஆம் தேதி முதல் 3 டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
Trending
கேப்டனாக இருந்த மிதாலிராஜ் ஓய்வுபெற்றதையடுத்து, ஹர்மன்பிரீத் கவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஒருநாள் அணி : ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்) ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷ்திகா பாடியா, எஸ் மேக்னா, தீப்தி சர்மா, பூணம் யாதவ், ராஜேஸ்வரி கெய்வாட், சிம்ரன் பஹதூர், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகார், மேக்னா சிங், ரேணுகா சிங், தனியா பாட்டியா, ஹர்லீன் தியோல்.
இந்திய டி20 அணி : ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்) ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷ்திகா பாட்டியா, எஸ் மேக்னா, தீப்தி சர்மா, பூணம் யாதவ், ராஜேஸ்வரி கெய்வாட், சிம்ரன் பஹதூர், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகார், மேக்னா சிங், ரேணுகா சிங், ஜெமிமஹ் ரோட்ரிகஸ், ராதா யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now